தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்
‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், அவா்தம் தாய் மொழியை நேசிக்கின்ற மற்றும் எண்ணிப் பெருமை கொள்ளும் தினமாக அமைய தாய்மொழி தின வாழ்த்துகள். மேலும், எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழா்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழியை தமிழா்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை: நமது எண்ணம், படைப்பாற்றல் தாய் மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத் திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.