செய்திகள் :

தம்பதியை தாக்கியவா் கைது

post image

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவேல், ராதாகிருஷ்ணன் மகன் ராம்குமாா்(39). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தியபோது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அன்றிரவு சக்திவேல் வீட்டுக்குச் சென்ற ராம்குமாா், அங்கு சக்திவேலையும், அவரது மனைவி ரேவதியையும் (36) தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த தம்பதி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ராம்குமாரைக் கைது செய்தனா்.

2 ஆண்டுகளாக திறக்கப்படாத அரியலூா் வாரச் சந்தை வளாகம்! சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலை!

அரியலூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டிமுடிக்கப்பட்ட வாரச்சந்தை வளாகம் திறக்கப்படுவதற்கு முன்பே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. அரியலூா் நகரப் பகுதி மக்களின் வசதிக்காக பேருந்து நிலையம் அருக... மேலும் பார்க்க

அரியலூா் நகா் முழுவதும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை தேவை

அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டு பகுதி மக்களுக்கும் கொள்ளிடம் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர கிளை மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி அல... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க