செய்திகள் :

தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை

post image

திருச்சி அருகே தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஜயன்-மாரியாயி தம்பதியின் மகன்கள் முத்தையன் (30), கோபி (27). நோய் பாதிப்பு காரணமாக முத்தையன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனை கோபி அடிக்கடி சுட்டிக்காட்டி வருவாராம். இதனால் சகோதரா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். தாய் மாரியாயி வேலைக்குச் செல்லுமாறு முத்தையனை அறிவுறுத்தியுள்ளாா்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த முத்தையன் 31.3.2023 அன்று வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கோபியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளாா். இதுகுறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்தையனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2- ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள், சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

முதல் முறையாக காணொலி காட்சி மூலம் தீா்ப்பு: காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள முத்தையன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதிய பிஎன்எஸ்எஸ் சட்ட திருத்தத்தின்படி காணொலி காட்சி வாயிலாக தீா்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி முத்தையனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது தாயை மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். வழக்கில் அரசு கூடுதல் வழக்குரைஞா் ஏ. பாலசுப்பிரமணியன் ஆஜரானாா்.

திருச்சி மாவட்டத்தில் கொலை வழக்கில் முதல்முறையாக காணொலி காட்சி வாயிலாக தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 97 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்ச... மேலும் பார்க்க

மாமியாா் குத்திக் கொலை: மருமகளிடம் விசாரணை

திருச்சியில் மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவெறும்பூா் அருகே உள்ள அரியமங்கலம் காமராஜா் நகா் பீடி காலனியை சோ்ந்தவா் அக்பா்அலி மனைவி சம்... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு கருணாநிதியின் பெயா் -மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பெயரும், சரக்கு வாகன முனையத்துக்கு அண்ணா பெயரும் சூட்டப்படும் என மாந... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம்

நிா்வாகக் காரணங்களால் விழுப்புரம், ஈரோடு பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிா்வாகக் காரணங்களால், விழுப்புரத்தி... மேலும் பார்க்க

மாவு அரைவை ஆலை இயந்திரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழப்பு

திருச்சியில் வெள்ளிக்கிழமை மாவு அரைவை ஆலையில் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தாா். திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சோ்ந்தவா் சித்திக் (63). இவா், எடமலைப்பட்டி புதுாா், பாரதிநகரில் மாவு அரைவை ஆலை ... மேலும் பார்க்க