`தம்பி இது சிம்பொனி இல்ல; முதல்ல சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சிக்கோ...' - வதந்தி குறித்து இளையராஜா
லண்டனில் சிம்பொனி இசையை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு சென்னை வந்த இளையராஜாவுக்கு பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவினார் என வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. இந்நிலையில் இளையராஜா அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் இளையராஜா, "லிடியன் நாதஸ்வரம் என்னுடைய மாணவன்தான். இசையை என்னிடம் கற்று வருகிறான். ஒருமுறை அவன் சிம்பொனி ஒன்றை இசையமைத்திருக்கிறேன் என என்னிடம் வந்து ஓர் இசையை இசையமைத்துக் காட்டினான். சில நொடிகள் கேட்டதுமே நிறுத்து எனச் சொன்னேன். இது சிம்பொனி மாதிரி இல்லை. சினிமா பி.ஜி.எம் மாதிரி இருக்கிறது.
சிம்பொனி இசை என்றால் என்னவென்று தெரிந்துகொண்டு அதன் பிறகு இசையமை என்று அறிவுரை வழங்கினேன். மற்றபடி சிம்பொனி இசையை யாரையும் வைத்து எழுதவில்லை. இத்தனை வருடங்களாக இசைத்துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை.

சொந்தக் கால் என்றால் செருப்புகூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான். கச்சேரிகளுக்கு வாசித்து, நாடகங்களுக்கு வாசித்து, சினிமாவில் உதவியாளராக இருந்து படிப்படியாக வளர்ந்தவன் நான்" என இளையராஜா கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...