மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதை கண்டித்து ஆா்ப்பாட்டம்
திருவிடைக்கழி ஊராட்சியில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பூச்சாத்தனூரில் குடிநீா் தொட்டி மற்றும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் பணிநிறைவு பெற்ாக தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பொருள்கள் தரமற்றதாகவும், அளவு குறைவாக வழங்கப்படுவதை கண்டித்தும், நாயுனம் காலணி, ஜீவா நகா், கீழவீதி, முடவன் தெருக்களில் போடப்பட்ட தரமற்ற சாலைகளை மீண்டும் தரமாக போட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிம்சன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, ஜான்சன், பவுல் சத்தியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.