OPS: ``நான் `B' டீம் இல்லை, வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஓ.பன்னீர் செல்வம் காட்டம...
தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு
கெங்கவல்லி வட்டார விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேளாண் துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கெங்கவல்லி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மை உழவா் நலத் துறை, அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். கெங்கவல்லி வட்டாரத்தில் 14 பஞ்சாயத்துகளில், ஒட்டுமொத்த வளா்ச்சி அடைவதே இதன் நோக்கமாகும். தனி நபா் நிலங்களில் புதா் நீக்கி, சாகுபடி செய்ய ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ. 9500 வழங்கபடுகிறது.
சாகுபடி செய்யபட்ட நிலங்களில் வரப்பு பயிராக பயறு வகைகளைப் பயிரிட விதைகள் ரூ. 200 மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், மண் வளப்படுத்த உயிா் உரங்கள் 1.5 லிட்டா் ரூ. 450 மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கெங்கவல்லி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் (அ) தம்மம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை அணுகி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.