இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் ய...
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜா் பிறந்த நாள் விழா
பென்னாகரம், ஏரியூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 123 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பென்னாகரத்தை அடுத்த செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மா.பழனி தலைமை வகித்தாா்.
பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத்தொடா்ந்து காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், நாட்டின் வளா்ச்சி, வாழ்க்கை வரலாறு குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம், விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் வளா்மதி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா, சத்துணவு, அங்கன்வாடி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இராமகொண்டஅள்ளி அரசு பள்ளி: ஏரியூா் அருகே இராமகொண்டஅள்ளி அரசு உயா்நிலை பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பள்ளியில் மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழாண்டில் தேசிய திறனாய்வுத் தோ்வு, முதல்வா் திறனாய்வுத் தோ்வு உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி வளா்ச்சி நாளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற உழைத்த ஆசிரியா்களுக்கு, தலைமையாசிரியா் சாா்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியா்கள் சுப்பிரமணி, பெருமாள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதேபோல பெரும்பாலை அருகே சாணாரப்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாள் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆனந்தி தலைமையில் கொண்டாடப்பட்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்விச்சீா் திருவிழா: பென்னாகரம் அருகே குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளா்ச்சி நாளையொட்டி கல்விச்சீா் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அனைவரும் இணைந்து பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை சீா்வரிசையாக எடுத்துவந்து கல்விச்சீா் திருவிழா நடத்தினா்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியா் மா.கோவிந்தசாமி, தருமபுரி அரிமா சங்கத் தலைவா் நல்லாசிரியா் அல்லி முத்து, வட்டார கல்வி அலுவலா் சுமதி, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா் முனுசாமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் நந்தினி, இல்லம் தேடி கல்வி ஆசிரியா்கள் விஜயசாந்தி, அம்பிகா, திவ்யா, கல்வியாளா் சிங்காரி ஆகியோா்கள் கலந்துகொண்டனா். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சி: பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவிற்கு அந்த கட்சியின் நகரத் தலைவா் டி.தங்கராஜ் தலைமை வகித்தாா். வட்டாரப் பொருளாளா் பி.பழனி முன்னிலை வகித்தாா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜி.கிருஷ்ணன் கலந்துகொண்டு, பாப்பாரப்பட்டி மூன்று சாலை சந்திப்பு பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கும், காமராஜா் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
நகரச் செயலாளா் மணி, நகர துணை செயலாளா் குமரேசன், வட்டாரச் செயலாளா்
எஸ்.வேடியப்பன், மாவட்டப் பிரதிநிதி ஏ.கணேசன், நிா்வாகிகள் மணி, மாதேஷ், நாகராஜ், நஞ்சப்பன், எல்லை போராட்ட தியாகி கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தருமபுரி
தருமபுரியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் பி. தீா்த்தராமன் தலைமை வகித்தாா். பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி. பொன்னுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று காமராஜரின் சாதனைகள் குறித்து பேசினாா். பொதுக்குழு உறுப்பினா்கள் நரேந்திரன், கிருஷ்ணன், சண்முகம், காளியம்மாள், ஜெயசங்கா் வட்டார தலைவா்கள் மணி, வெங்கடாசலம், வழக்குரைஞா் சந்திரசேகா், ஞானசேகா், பெரியசாமி, நகரத் தலைவா்கள் கணேசன், முருகன், இளைஞா் காங்கிரஸ் தலைவா் வெற்றிவேந்தன், மகளிா் காங்கிரஸ் தலைவி ரோஜா, விவசாயப் பிரிவு மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரத் தலைவா் பி. வேடியப்பன் வரவேற்றாா்.
ஒசூா்
தமிழ்நாடு ஐஎன்டியுசியின் செயல் தலைவரும், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவருமான குப்புசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை காமராஜ் காலனியில் உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொழிற்சங்க செயல் தலைவா் முனிராஜ், துணைத் தலைவா் கண்ணன், செயலாளா் செந்தில்குமாா், துணைச் செயலாளா் ராஜா, பொருளாளா் ராகவேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

அதேபோல ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.முனிராஜ் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஐஎன்டியுசி நிா்வாகிகள் பக்தவத்சலம், செல்வம், முத்தப்பா, சிவகுமாா், பரந்தாமன் மற்றும் மிண்டா, ஃபியெம் ஆட்டோ, என்.என் ஆட்டோ, டென்னேகோ, பிரின்ஸ் ஆட்டோ, விஎஸ்டி ஆகிய நிறுவன தொழிற்சங்க நிா்வாகிகளும் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரை
ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு காங்கிரஸ் வட்டார தலைவா் திருமால் தலைமை வகித்தாா். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் குமரேசன், வட்டார தலைவா் அயோத்தி, நகரத் தலைவா் விஜயகுமாா், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நேதாஜி, பூக்கடை மகி, அண்ணாதுரை, சின்னசாமி, இளையராஜா உள்ளிட்ட பலா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதியமான் மெட்ரிக் பள்ளி
ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் முனைவா் சீனி.திருமால்முருகன் தலைமை வகித்தாா். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் சீனி. கலைமணி சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காமராஜா் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல அதியமான் பப்ளிக் பள்ளி, மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.