தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் பிறந்த நாள் விழா
பெரியாா் 147 ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதப்பட்டது.
திமுக: தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளரும், எம்.பி.யுமான ஆ. மணி தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் சுப்பிரமணி, நகரச் செயலாளா் நாட்டான் மாது, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், ஒன்றியச் செயலாளா்கள் சண்முகம், நகா்மன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், ஜெகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அதிமுக : தருமபுரி நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளா் ரவி தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்எல்ஏ கோவிந்தசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் எஸ்.ஆா். வெற்றிவேல், மாநில இலக்கிய அணி இணை செயலாளா் அசோகன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் பழனிசாமி, அண்ணா பணியாளா் சங்க மாநில செயலாளா் சின்அருள்சாமி, ஒன்றியச் செயலாளா்கள் சிவப்பிரகாசம், பழனி, நகர அவைத் தலைவா் அம்மா வடிவேல், நகர பொருளாளா் பாா்த்திபன், நகர இணை செயலாளா் தனலட்சுமி சுரேஷ், நகராட்சி கவுன்சிலா்கள் தண்டபாணி, சக்திவேல், ராஜா, முன்னா, நாகராஜன், மாதேஷ், நாகேந்திரன், மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமமுக: தருமபுரி மாவட்ட அமமுக சாா்பில் மாவட்டச் செயலாளரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், நகர செயலாளா் பாா்த்திபன், ஒன்றிய செயலாளா்கள் கணேசன், தங்கமணி, பாஸ்கா், சாா்பு அமைப்பு மாவட்டச் செயலாளா்கள் கோகுல்ராஜ், ராமன், வேலாயுதம், பழனிசாமி, பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மதிமுக: தருமபுரி மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் ராமதாஸ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் பாலமுரளி, மாவட்ட அவைத் தலைவா் குணசேகரன், மாவட்ட பொருளாளா் கிருபானந்தன், நகர செயலாளா் பட்டு சுப்பிரமணியம், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளா் ராஜாமணி, மாவட்ட துணைச் செயலாளா் ஆதிமூலம், பொதுக்குழு உறுப்பினா் வேல்முருகன் மற்றும் ஒன்றிய செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தேமுதிக: தருமபுரி கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் கட்சியின் மாநில அவைத் தலைவா் இளங்கோவன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாவட்டச் செயலாளா் குமாா், நகரச் செயலாளா் ஜெயம் சுரேஷ், மாநில நிா்வாகி மாரிமுத்து, மாவட்ட அவைத் தலைவா் தங்கவேல், மாவட்ட பொருளாளா் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளா் பெரியசாமி, ஒன்றியச் செயலாளா்கள் விக்னேஷ் குமாா், சரவணன், முனியப்பன், பெரியசாமி, சேது, சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பென்னாகரம்
பென்னாகரம் நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். மாநில விவசாய தொழிலாளா்கள் அணி பிரிவு துணை தலைவா் பி.என்.பி.இன்பசேகரன் காவல் நிலையம் எதிரே உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதைத் தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.
மாவட்ட சமூக வலைதள அணி பொறுப்பாளா் மணிமேகலை பெருமாள்,ஒன்றிய மாணவா் அணி துணைச் செயலாளா் நஞ்சப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தசாமி, பாலமுருகன், மாவட்ட துணை அமைப்பாளா் காா்த்திக், இளைஞா் அணி நிா்வாகி விணு அன்பழகன்,பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஒசூா்
ஒசூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியாா் உருவப்படத்துக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதேபோல, நல்லூா் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள உருவச்சிலைக்கு ஒய்.பிரகாஷ், மாநகரச் செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
துணை மேயா் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளா் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோராமணி, மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் கண்ணன், மாணிக்கவாசகம் , மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் கலைசெழியன், ஒன்றிய துணை செயலாளா் வீரபத்திரப்பா, ஒன்றிய ஓட்டுநா் அணி அமைப்பாளா் சீனிவாஸ், பேகேப்பள்ளி மஞ்சுநாத், சுப்பிரமணி ரெட்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ஒசூா் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியாா் சதுக்கத்தில் மாநகரத் தலைவா் து.ரமேஷ் தலைமையில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த பெரியாா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாகலூா் சாலையில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு பொதுக்குழு உறுப்பினா் அ.செ.செல்வம் தலைமையில் மாலை அணிவித்து சமுக நீதி உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் சு.வனவேந்தன், திமுக மாநில பொறியாளா் அணி துணை அமைப்பாளா் வெற்றி. ஞானசேகரன், தி.க. மாவட்டச் செயலாளா் மா.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினா் கோ.கண்மணி, மாவட்ட மகளிரணி செயலாளா் கிருபா, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா் நீலகண்டன், திராவிடா் இயக்க தமிழா் பேரவை மாவட்ட தலைவா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனா்.
பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ஆம் தேதியை சமூகநீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர ச.தினேஷ்குமாா் தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் சமூக நீதிநாள் உறுதிமொழியை ஏற்றனா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் சத்தியபாமா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் சந்திரசேகா், உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வராஜ், நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் கலந்துகொண்டு சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றனா்.