திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றிய தீ... திமுக போராட்டத்தில் பரபரப்பு
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறிவரும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், `நாகரிமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடைய உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். அதன்படி தேனி மாவட்டம் போடி நகர் தேவர் சிலை முன்பாக திமுக நகர கழக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில், தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக போடி 1-வது வார்டு செயலாளர் சந்திரசேகர் மீது தீ பற்றியது.
சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் தனது வேட்டியை கழட்டி விட்டு தன்னை தற்காத்துக் கொண்டார். அருகே இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

பிறகு மீண்டும் போராட்டத்தை போடி நகர் கழக நிர்வாகிகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து தீக்காயம் ஏற்பட்ட சந்திரசேகரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்தனர்.

இதேபோல தேனி திமுக வடக்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டிக்கும் விதமாக அவரது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நேருசிலை மும்முனை சந்திப்பில் உருவ பொம்மையை எரித்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர் . உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தின் போது தொண்டர் ஒருவர் மீது தீப்பற்றியது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
