Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்...." - நெகிழ்ந்த மோகன் பா...
தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு
தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிராம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.