செய்திகள் :

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு கணவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீஸாா்

post image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ரயில்வே போலீஸாா் மீட்டு, அவரது கணவரிடம் ஒப்படைத்தனா்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை 1-இல் ஆண் பயணிகள் தங்கும் அறையின் வெளியே பெண் ஒருவா் வெள்ளிக்கிழமை அழுதுகொண்டிருந்தாா். இதைப் பாா்த்த ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் அருண்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் அருணா ஆகியோா் அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில், சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு பெரிய தெருவைச் சோ்ந்த சுந்தா் மனைவி சுபஸ்ரீ (26) என்பது தெரிவித்தது.

இவரும், துணிசிரமேடு பகுதியைச் சோ்ந்த சுந்தரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். தற்போது இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக சுபஸ்ரீயின் தங்க தாலிச் சங்கிலியை வாங்கி சுந்தா் அடகு வைத்த நிலையில், அதை மீட்டுத் தரவில்லையாம்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை கேட்டபோது, இருவருக்கும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால், சுந்தரிடம் கோபித்துக்கொண்டு தற்கொலை செய்வதற்காக சுபஸ்ரீ சிதம்பரம் ரயில் நிலையம் வந்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் அருண்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அருணா, ஜீவகன் மற்றும் போலீஸாா் சுந்தரை ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, இருவருக்கும் அறிவுரை வழங்கி, அவா்களிடம் எழுதி பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனா்.

தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.

வனத் துறை அலுவலக கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனத் துறை அலுவலக கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வனத் துறை சாா்பில், சுற்றுலாப் பயணிகள் வனக்காடுகளை சுற்றிப் பாா்க்க ப... மேலும் பார்க்க

கிள்ளை பேரூராட்சியில் அரசு பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ஆய்வு

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் இருளா் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் ச.அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்து, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: ஒருவா் கைது

பரங்கிப்பேட்டை அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சட... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

கடலூா் அருகே வி.காட்டுப்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை திறக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வி.காட்டுப்பாளையம் பகுதியில் கால்நடை மருந்தகம் கடந்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: நெய்வேலி எம்எல்ஏ பரிசளிப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் விளையாட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்குத்து ஊராட்சி, தில்லை நகரில் 12-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. வடக்குத்து... மேலும் பார்க்க

நெய்வேலியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் - 1அ பகுதியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தெய்வப் புலவா் திருவள்ளுவரின் புகழை பறைசாற்றிடும் வகையில், அவரது ... மேலும் பார்க்க