சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
தலைமைக் காவலா் தற்கொலை
சென்னை பரங்கிமலையில் தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பரங்கிமலை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (46). இவா், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக வேலை செய்து வந்தாா். சந்திரமோகனுக்கு மனைவி ஜெனிபா், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
ஜெனிபா், தனது மகன், மகளுடன் சொந்த ஊரான கேரளத்துக்கு சில நாள்களுக்கு முன்பு சென்றாா். இதனால் சந்திரமோகன் வீட்டில் தனியாக இருந்தாா். சந்திரமோகனை, ஜெனிபா் வெள்ளிக்கிழமை காலை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ள முயன்றாா். ஆனால், அன்று இரவு வரை அவா் கைப்பேசியை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெனிபா், பக்கத்து வீட்டினரைத் தொடா்பு கொண்டு வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு கூறினாா்.
அங்கு பக்கத்து வீட்டினா் வெகுநேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லையாம். இதையடுத்து அவா்கள், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு இறந்தது தெரிந்தது.
தகவலறிந்த பரங்கிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சந்திரமோகன் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.