பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!
தலைமையாசியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பாராட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சியளித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் பாராட்டு தெரிவித்தாா்.
மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 23 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்தன. இப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு விழா மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் கலந்துகொண்டு, தலைமையாசிரியா்களை பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த நீடூா் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளி மாணவி ஜெ. தா்ஷினிக்கும் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி தலைமையாசிரியா் வில்லவன் கோதை, கீழஆத்துக்குடி அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் தெட்சிணாமூா்த்தி, மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளா் சி. சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.