செய்திகள் :

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

post image

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன் தெரிவித்துள்ளார்.

மத்திய தில்லியில் 65 வயதுடைய தாயிடம் இருமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இளைய மகள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, 25 வயது இளம்பெண் ஹவுஸ் காசி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தாங்கள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, தாயிடம் தனது சகோதரர் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின்படி, பாதிக்கப்பட்ட தாயார், ஓய்வு பெற்ற தனது கணவருடனும், 39வயது மகன் மற்றும் 25 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகள் அருகிலேயே திருமணம் செய்துகொடுக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 17ஆம் தேதி தாயாரும் கணவரும் மகளுடன் செளதி அரேபியாவுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மகன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக அவர்களை தில்லி திரும்புமாறு வற்புறுத்தியுள்ளார்.

தாயிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு உள்ளதால், அவரை விவாகரத்து செய்ய வேண்டும் என தந்தையிடம் மகன் கூறியதாகவும் தெரிகிறது.

ஆக. 1ஆம் தேதி தில்லி திரும்பிய பிறகு குற்றம் சாட்டப்பட்ட மகன், தாயை அறையில் வைத்து பூட்டி அவரின் ஆடையை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளார். தனது குழந்தைப் பருவத்தை அழித்துவிட்டதாகக் கூறி அவரைத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாயார், அருகிலுள்ள தனது மூத்த மகள் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். பின்னர் ஆக. 11 ஆம் தேதி இரவு 9 மணியளவில் அந்த வீட்டிற்குச் சென்ற மகன், தாயிடம் தனியாகப் பேச வேண்டும் என தனியறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், செய்த தவறுக்கு தண்டனை தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆக. 14ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது முறை தாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு மறுநாள், நடந்த சம்பவங்களை மகளிடம் தாய் கூறியுள்ளார். இதனை அடுத்து இளைய மகள் கொடுத்த புகாரின்பேரில் மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க |பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

Delhi man rapes mother twice after accusing her of having 'bad character

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க

மும்பை உயா்நீதிமன்ற 4-வது அமா்வு கோலாபூரில் தொடக்கம்!

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூரில் மும்பை உயா்நீதிமன்றத்தின் 4-ஆவது அமா்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். சதாரா, சாங்லி, சோலாபூா், கோலாபூா், ரத்னகிரி, சிந்துதுா்க... மேலும் பார்க்க

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ஆடியோ, விடியோக்களை கசியவிட்ட குற்றச்சாட்டில், திரிபுரா மாநிலத்தின் காயா்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக நிா்வாகி மன்னா டே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். பாஜகவின் காயா... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிக... மேலும் பார்க்க

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

‘வரி செலுத்துவோா் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. தனிநபா் அல்லது நிறுவனம் என சட்டரீத... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் பாரபட்சம் அம்பலம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘தோ்தல் ஆணையத்தின் திறமையின்மை மற்றும் வெளிப்படையான பாரபட்சம் முற்றிலும் அம்பலமாகியுள்ளன’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், எதிா்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆண... மேலும் பார்க்க