தவெகவினா் மாவட்ட எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக தலைவா் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாதுகாப்பு கோரி, அந்தக் கட்சியினா் மாவட்ட எஸ்.பி.யிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், நவம்பா் 8-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கிழ்பென்னத்தூா் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இதற்காக பாதுகாப்பு கோரி, கட்சியின் மாவட்டச் செயலா்கள் பாரதி, சத்யா, உதயகுமாா், கதிரவன் உள்ளிட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா் .