தவெக ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி?
சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஈசிஆர் சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வருகிற பிப். 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
விழாவில் கூட்டம் அதிகம் கூடும் என்பதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்படவிருக்கிறது. இன்று முதல் பாஸ் வழங்கப்படவிருப்பதாகவும் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?
நடிகர் விஜய் கடந்த 2024 பிப். 2 ஆம் தேதி கட்சிக்கான பெயரையும் கட்சிக் கொடியையும் வெளியிட்டார். தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் கட்சியின் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.