தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்
தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்காலத் தடை கேட்டு பகுஜன் சமாஜ் தொடர்ந்த இடைக்கால மனுவை அக்கட்சி திரும்பப் பெற்றது.
இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை திரும்ப பெற்றது பகுஜன் சமாஜ். அதேசமயம் பிரதான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
பெயர், சின்னத்தை வைத்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதால் அவரையும் பிரதான வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கொடியில் உள்ள யானை சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலா் இளங்கோவன் சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
புதுச்சேரியில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம்
பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த விதத் தொடா்பும் இல்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளா்ச்சிக்கான எதிா்காலத் திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள ஒற்றை யானைக்கும் தவெக கொடியில் உள்ள எக்காலம் ஊதும் இரட்டை யானைக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்காளா்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவே, அபராதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
The BSP has withdrawn the interim petition it had filed seeking a temporary ban on the use of the elephant symbol in the TVK flag.