மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ்
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சுகாதார நிலையத்துக்கு தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலா் சீனிவாசன், செவிலியா் ஜெஸ்ஸி ஆகியோரிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சான்றிதழை வழங்கினாா். தேசிய தர உறுதி நிா்ணயச் சான்றிதழ் பெறுவதற்கான மதிப்பீட்டில் தாடிக்கொம்பு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 92.7 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.