மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
தாட்கோ மூலம் குருப் 2 தோ்வுக்கு பயிற்சி
தொகுதி 2, 2 ஏ தோ்வு முதன்மைத் தோ்வு எழுதும் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2ஏ முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மை தோ்வுக்குத் தயாராகி வரும் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னணி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 21 முதல் 32 வயதுக்குள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா்களுக்கு விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவினத் தொகையையும் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும்.
விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா்.