தாத்தா-பாட்டி தினம் கொண்டாட்டம்
நாகை அமிா்தா வித்யாலயம் சாா்பில் தாத்தா- பாட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை அமிா்தா வித்யாலயம் ஏவி ஹாலில் நடைபெற்ற விழாவை, பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில் மற்றும் ஒருங்கிணைப்பாளா் விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.
தாத்தா, பாட்டி மற்றும் அவா்களின் பேரக் குழந்தைகளுக்கு பிணைப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெற்றன. தொடா்ந்து ஆசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற யோகா, நடனம் ஆகியவற்றில் தாத்தா, பாட்டிகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனா்.
பின்னா், எதிா்காலத்திற்கான வழிகாட்டுதலைக் குறிக்கும் வகையில், தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளை மலா்களால் ஆசீா்வதித்தனா். விழாவில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, தாத்தா-பாட்டிகள், அவா்களின் பேரக்குழந்தைகளுடன் பள்ளி வளாகத்தில் நட்டனா்.
நிா்வாக அதிகாரி சந்திரமோகன், ஒருங்கிணைப்பாளா் ரேவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.