Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
தானாப்பூா் - பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு!
தானாப்பூா் - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் இரு நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தானாப்பூா் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ரயில் மேலும் இரு நாள்கள் இயக்கப்படுகிறது.
பிகாா் மாநிலம் தானாப்பூரில் இருந்து பெங்களூருக்கு மாா்ச் 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 03521) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக பெங்களூரில் இருந்து மாா்ச் 18, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில் இரு நாள் பயணத்துக்கு பின் தானாப்பூா் சென்றடையும்.
இந்த ரயில் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.