செய்திகள் :

தாயாரின் திருமணம் மீறிய உறவு; உறவில் இருந்த நபரை கொன்று, குடலை எடுத்து வீசிய சகோதரர்கள்

post image

குஜராத் மாநிலத்தில் தங்களது தாயாரின் காதலனை பலர் முன்னிலையில் மகன்கள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ரதன்ஜி(58). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் கணவனை இழந்த பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு அப்பெண்ணின் மகன்கள் சஞ்சய்(27) மற்றும் ஜெயேஷ்(23) ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ரதன்ஜி அங்குள்ள கட்டிடம் ஒன்றில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சஞ்சய் மற்றும் அவரது சகோதரர் வந்தனர். அவர்கள் இரண்டு பேரும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரதன்ஜியை தாக்க ஆரம்பித்தனர். அருகில் நின்ற தொழிலாளர்கள் இதனை தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இரண்டு பேரும் ரதன்ஜியை தாக்கியதோடு அவரது வயிற்றில் இரும்பு கம்பியால் பல முறை குத்தினர்.

இதில் அவரது வயிற்றில் இருந்து குடல் வெளியில் வந்தது. அப்படி இருந்தும் ஆத்திரம் அடங்காத சகோதரர்கள் தொழிலாளர்கள் முன்னிலையில் ரதன்ஜி குடலை வெளியில் எடுத்து வானத்தை நோக்கி ஆக்ரோஷத்துடன் வீசினர். இதனை கண்டு அங்கு நின்ற தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். கொலை செய்து விட்டு இரண்டு பேரும் சம்பவ இடத்தில் இருந்து பைக்கில் தப்பிச்சென்றனர். ஆனால் அவர்களின் மொபைல் போன் சிக்னலை வைத்து போலீஸார் இரண்டு பேரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில்,''கொலை செய்யப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் தாயாருடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளார். இதற்கு சகோதரர்கள் இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு குடும்பத்தில் அவர்கள் இருவரும் மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளானார்கள்'' என்றார். இது குறித்து ரதன்ஜியின் மகன் அஜய் கூறுகையில், ''எங்களது தந்தையை இரண்டு சகோதரர்களும் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அதோடு பல முறை எனது தந்தையுடன் அவர்கள் சண்டையும் போட்டனர். இதற்கான பஞ்சாயத்தார் கூட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தீர்வு ஏற்படவில்லை''என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க