செய்திகள் :

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று காதல் ஜோடிகளை கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து 7,000 பணம், நகைகளை பறித்துள்ளது.

பணம், நகைகளை கொள்ளையிட்டதுடன், காதலனுடன் இருந்த காதலியை வலுக்கட்டாயமாக மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை, காதலன் கண்முன்னேயே செய்துள்ளது மனிதநேயமில்லாத அந்த கும்பல்.

மாவட்ட எஸ்.பி தங்கதுரை

இது குறித்து போலீஸாருக்கு தகவல் வர, ரத்தக் காயங்களுடன் கிடந்த காதல் ஜோடிகளை மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடத்தவுடன் கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதன்மூலம் சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் லொகேஷன் போன்றவற்றை வைத்து விசாரணை தொடங்கிய தனிப்படை போலீஸார், இந்த கொடூர குற்றச் செயல்களில் ஈடுபட்டது. பிரபல ரெளடி கும்பல் என்பது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடிகளான கலையரசன், அபிக்ஷேக், நாராயணன், சுரேக்ஷ் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள்மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் வட்டாரங்களில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த கும்பல் வழிப்பறி, வீடு கொள்ளையிட்டு திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தனியாக இருந்த காதல் ஜோடிகளிடம் நகை, பணத்தை பறித்ததுடன் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போலீஸார் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ரெளடிகளான கலையரசன், அபிக்ஷேக்கினை கைது செய்துள்ள நிலையில், இன்று பொன்மலைக்குட்டை பகுதியில் தலைமறைவாக இருந்த நாராயணன், சுரேக்ஷ் ஆகியோரை பிடிக்க சென்றபோது, போலீஸாரை நோக்கி பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில், 2 போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் தப்பியோட முயன்ற சுரேஷ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காலில் குண்டு அடிப்பட்டு காயமடைந்தார். நாராயணன் கீழே தடுமாறி விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கியது எப்படி?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், டாக்டர் மூா்த்தி சாலையைச் சேர்ந்தவர் சார்லஸ் (63). இவர் கடந்த ஜனவரி 8ம் தேதி, தனது மகனைச் சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காகக் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுக்கு குடும்பத்துடன் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: மாட்டுக்குப் புல் அறுக்கச் சென்ற மூதாட்டி; காட்டெருமையால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரின் மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு நான்கு ஆண், ஒரு பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்க... மேலும் பார்க்க

மதுரை: கலெக்டர், காவல்துறையினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயிலில் திருட்டு; போலீஸ் தீவிர விசாரணை

கலெக்டர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியிலுள்ள கோயிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் விசாரணைமதுரை ரேஸ்கோர்ஸ... மேலும் பார்க்க

`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?'- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க