செய்திகள் :

தாயுமானவன் திட்டம்: "விஜயகாந்த்தின் கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்" - பிரேமலதா நெகிழ்ச்சி

post image

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர் திட்டம்’ இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

MK Stalin
MK Stalin

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "தமிழக அரசின் தாயுமானவன் திட்டம் விஜயகாந்த்திற்குக் கிடைத்த வெற்றி. வீடு தேடி ரேஷன் பொருள் என்ற விஜயகாந்த் கனவின் முதல் கட்டத்தை முதல்வர் நிறைவேற்றி உள்ளார். தாயுமானவன் திட்டத்தைத் தொடங்கிய முதல்வருக்கு நன்றி" என்று பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு; ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு; பின்னணி என்ன?

அனைத்து மாணவ மாணவிகளையும் போல ஜீன் ராஜன் என்ற மாணவி தனது பட்டத்துடன் மேடையேறி வந்தபோது ஆளுநர் ஆர். என்.ரவி அவருடன் புகைப்படம் எடுக்க கையை நீட்டினார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத மாணவி, துணை வேந்தர் சந்த... மேலும் பார்க்க

``டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் இணையப்போகிறோமா?’’ - விளக்கும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று மாலை மேற்கொள்கிறார். இதையொட்டி, திருப்ப... மேலும் பார்க்க

அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் பில்டிங் அப்டேட்!

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பொதுநல வழக்கு ஒன்றில், போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணி... மேலும் பார்க்க

மைத்ரேயன்: திமுக-வில் இணைந்த RSSகாரர்- ஓயாத கட்சித் தாவலின் பரபர பின்னணி

ஆர்.எஸ்.எஸ் டு தி.மு.கஅ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தி.மு.க உறுப்பினர் அட்டைய... மேலும் பார்க்க

தனுஷ்கோடி: இந்திய விசா மறுப்பு; காதலனுக்காகச் சட்டவிரோதமாக படகில் வந்த இலங்கை பெண்; போலீஸ் விசாரணை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீஸாருக்குத் தகவல் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற கடலோரப் பா... மேலும் பார்க்க