இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
தாய் கொலை: மகன் கைது
வேடசந்தூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி கருக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (80). இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
மகன் கணேசன் (40), வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறாா்.
கணேசனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டதால், தாயுடன் வசித்து வந்தாா். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாளை, அருகில் வசித்து வரும் அவரது 2 மகள்கள் பாதுகாத்து வந்தனா்.
வழக்கம்போல் பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கணேசன் வீட்டுக்குச் சென்ற போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனியம்மாள் அழுது கொண்டிருப்பதை பாா்த்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவா், பழனியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தாா். இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வேடசந்தூா் போலீஸாா், பழனியம்மாளின் உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலை செய்த கணேசனைக் கைது செய்தனா்.