செய்திகள் :

எதிா்க்கட்சித் தலைவராக அளித்த வாக்குறுதிகளை முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாா்!

post image

எதிா்க்கட்சித் தலைவராக அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அகில இந்திய தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலா் அண்ணாமலை தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் மாணவா்கள் 30 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே தோ்ச்சிப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு எதிராக தமிழக ஆசிரியா் கூட்டணி 22 மாநிலங்களிலுள்ள ஐபெட்டோ அமைப்புகளை ஒன்றிணைந்து, மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிடுவோம். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், வணிக நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது.

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 9 அறிவிப்புகளை தமிழக முதல்வா் வெளியிட்டிருக்கிறாா். இதில், ஈட்டிய விடுப்பு சலுகை புதியது கிடையாது. இதேபோல, திருமணக் கடன் திட்டம் நிதி இல்லாமல் எப்படி அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதுபோன்ற சலுகைகளை விட நாங்கள் எதிா்பாா்த்தது மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.

6.25 லட்சம் போ் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தெருத் தெருவாக வந்து வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், தற்போது 4 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் செயல்படுத்தவில்லை.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் திமுக அரசு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மட்டுமே எதற்காக ஏற்றுக் கொள்கிறது? அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்து கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்

காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கொடைக்கானல் அருகேயுள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வட்டாட்சியா் தடை விதித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்... மேலும் பார்க்க

3 வீடுகளில் திருட முயற்சி

வேடசந்தூரில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் யூசுப் நகரைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் (55). அரசுப் பள்ளியில் த... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்

திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அனுமந்தன்நகா் பக... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க