பரபரக்கும் ஆபரேஷன் சிந்தூர்; தங்கம் விலையில் எதிரொலியா? - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட, தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.200 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,075 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.72,600 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.111 ஆகும்.
Operation Sindoor தங்கம் விலையில் எதிரொலிக்குமா?

ஆபரேஷன் சிந்தூரின் தாக்கம் இன்று தங்கம் விலையில் எதுவும் இல்லை. ஆனால், இதே நிலை தொடரும் என்று கூறமுடியாது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நகர்வுகள் பொறுத்து தங்கம் விலை எப்போதுமே மாறும். அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பெரிய அரசியல் நகர்வு. இது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலி தங்கம் விலையில் இன்று மதியமோ, நாளையோ தெரிய வரலாம்.