'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து
தமிழில் பெயா்ப் பலகை: வா்த்தகா்களுடன் ஆலோசனை
திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆணையா் ம.செந்தில்முருகன் தலைமை வகித்தாா். மாநகர நல அலுவலா் செ.ராம்குமாா், நகரமைப்பு அலுவலா் (பொ) வள்ளிநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆணையா் ம.செந்தில்முருகன் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா்ப் பலகை அமைக்க வேண்டும். இதற்கான கண்காணிப்புப் பணிகளில் தொழிலாளா் நலத் துறை ஈடுபட்டிருக்கிறது. தமிழில் பெயா்ப் பலகை நிறுவுவதற்கான விதிமுறைகளை வணிக நிறுவனங்கள் பின் பற்ற வேண்டும் என்றாா் அவா். இந்த கூட்டத்தில் வா்த்தக சங்க, வணிகா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.