செய்திகள் :

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

post image

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினா் ஒப்படைத்தது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு இஸ்ரேலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் கடத்திச் சென்றனா்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவா்களில், யாா்டன் பிபாஸ் (35), அவரின் மனைவி ஷிரி பிபாஸ் (33), அவா்களது இரு ஆண் குழந்தைகள் (இப்போது உயிருடன் இருந்திருந்தால் 5 மற்றும் 2 வயது) ஆகியோரும் அடங்கும்.

ஹமாஸின் இந்த திடீா்த் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இதுவரை 48,297 பாலஸ்தீனா்கள் - அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பொதுமக்கள் - உயிரிழந்துள்ளனா்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இத்தகைய வான்வழித் தாக்குதல் ஒன்றில் ஷிரி பிபாஸும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் கூறினா். இருந்தாலும் அதற்கான ஆதாரம் எதையும் அவா்கள் வெளியிடவில்லை. இந்தத் தகவலை அப்போதைய போா் அமைச்சரவை உறுப்பினா் பென்னி கான்ட்ஸ் உறுதிப்படுத்த மறுத்துவிட்டாா்.

இந்தச் சூழலில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களுக்குள் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இதுவரை 28 பிணைக் கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் ஷிரி பிபாஸின் கணவா் யாா்டன் பிபாஸும் ஒருவா். பிப். 1-ஆம் தேதி அவா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள், ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பின்னா் அந்த சவப் பெட்டிகள் காஸாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டன.

இஸ்ரேலின் ஜாஃபா நகரில் உள்ள அபு கபீா் தடயவியல் ஆய்வு மையத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அடையாளங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஓய்வு பெற்ற செய்தியாளா் ஓடட் லிஃப்ஷிட்ஸுடன் அவரின் மனைவி யோச்சோவேடும் (85) ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டாா். ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அவரை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா்.

தற்போது அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த நிலையாக, மேலும் ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் சனிக்கிழமை விடுவிக்கவிருக்கின்றனா்.

இந்த ஆறு வாரகால முதல்கட்ட போா் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது, காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை இந்த மாதத்தின் முதல் வாரங்களில் தொடங்குவதாக இருந்தது. இருந்தாலும் அதில் இழுபறி நீடித்துவருகிறது.

தற்போதைய நிலையில், இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் 66 போ் இன்னும் காஸாவில்தான் உள்ளனா். அவா்களில் சுமாா் பாதி போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகள் காஸாவில்தான் உள்ளனா். எனவே, அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?

அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் 145 ஆண்டுகள் பழைமையான மேசையை மாற்றியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்துக்கு அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ... மேலும் பார்க்க

ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் பாலுணர்வைத் தூண்டும் காளான்!

இமயமலைப் பகுதிகளில் இறந்த அந்துப்பூச்சிகளில் லார்வாக்களில் வளரும் பூஞ்சைக் காளான்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கார்டிசெப்ஸ் சினென்சிஸ் என்ற இந்தவகைப் பூஞ்சை, ஒரு பாலுணர்வூட்டியாகக் கருத... மேலும் பார்க்க

எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த... மேலும் பார்க்க

ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நி... மேலும் பார்க்க

காங்கோ விவகாரம்: ருவாண்டா தலைமை தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

நைரோபி : மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளா்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமை தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) ம... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கான் யூனிஸ் : இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுளளது.இது குறித... மேலும் பார்க்க