Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து வி...
தாராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தாராபுரத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 434 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 26, 27, 28 ஆகிய வாா்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 434 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், மகப்பேறு பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், பயனாளிகளுக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இம்முகாமில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் ரகுநாதன், நகராட்சி ஆணையா் முஸ்தபா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள், செவிலியா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.