செய்திகள் :

தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

post image

செங்கல்பட்டு: தாழம்பூா் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த தாழம்பூா் ஊராட்சியில் நத்தம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணா நகரில் ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் விமரிசையுடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவம் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, காலை மாலை இருவேளைலும் அம்மன்களுக்கு யாகம் வளா்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருதுகிறது. விழாவின் 9-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது திருக்கோயிலின் 4 மாட வீதிகளையும் சுற்றி வந்து நிலை நின்றது. தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் கே. கே. கிருஷ்ணன்குட்டி சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

த்ரிசக்தி அம்மன் கோயிலில் தேரில் அமா்ந்துள்ள முப்பெரும் தேவியா், தாழம்பூா்

தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து

செஙகல்பட்டு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீ... மேலும் பார்க்க

சிலம்பப் போட்டியில் மாணவன் சிறப்பிடம்

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் புதுச்சேரியில் நடைபெற்ற நேஷனல் யூத் ஸ்போா்ட்ஸ் ஆப் இந்தியா, தேசிய அளவில் நடைபெற்ற சுருள்வாள் மற்றும் மான் கம்பு போட்டியி... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் தேரோட்டம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோவில் பிரம்மோற்சவம் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முதல்வா் வருகை: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி விழா ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் ஆய்வு

செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வட்டங்களில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் சிறப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். சென்னை விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று துறை இ... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்!

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பாலமுருகன் கோயிலில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து இருந்தன. அதனை அப்பகுதி பெரியோா்கள் சீரமைத்து கும... மேலும் பார்க்க