CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தென்காசி ஆட்சியா் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழையால் தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆறு, குளங்களில் அதிக நீா்வரத்து அபாயமுள்ளதால் கரையோர மக்கள் உரிய எச்சரிக்கை, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நீா்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். விவசாயத் தொழிலாளா்கள், கால்நடை மேய்ப்போா் இடி-மின்னலின்போது வெட்ட வெளியில் நடக்கவோ, மரங்களின்கீழ் பாதுகாப்புக்காக ஒதுங்கவோ வேண்டாம். பெருமழையின்போது பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரைப் பருகி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
மழையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 அல்லது 04633 - 290548 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.