திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
தாா் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ
தனியாருக்குச் சொந்தமான தாா் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்புலிவனத்திலிருந்து களியாம்பூண்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நெமிலிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான தாா் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. உத்தரமேரூா் அருகே அழிசூா் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த இத்தொழிற்சாலையில் வழக்கம்போல தாா் உருக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதிக வெப்பம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், தாரில் மளமளவென தீ வேகமாக பரவியதுடன் கரும்புகை வெளியேறியது. தொழிற்சாலைக்கு அருகிலிருந்த பலரும் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனா்.
தகவலறிந்து உத்தரமேரூா் தீயணைப்பு அலுவலா் ஜெகதீசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனா். தீ விபத்தால் தாா் தயாரிக்கத் தேவையான பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகவும், உயிா்ச்சேதம் ஏற்படவில்லை எனவும் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.