செய்திகள் :

``திக்வேஷ் செய்தால் அபராதம், Kohli செய்தால் நியாயமா? BCCI இரட்டை வேடம்..'' - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

post image

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் ஸ்பின்னரான திக்வேஷ் ரதி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். மெகா ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, இதுவரை 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். விக்கெட் எண்ணிக்கைப் பெரிதாக இல்லையென்றாலும், இவரின் எக்கனாமி 7.2 மட்டுமே. அதேசமயம் இதற்கு நேர்மாறாக போட்டி நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ-யால் அபராதத்துக்கும் ஆளாகியிருக்கிறார்.

திக்வேஷ் சிங் - பிரியான்ஷ் ஆர்யா
திக்வேஷ் சிங் - பிரியான்ஷ் ஆர்யா

முதலில் பஞ்சாபுக்கெதிரான ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவை விக்கெட் எடுத்த பிறகு நோட்புக் செலிபிரேஷன் (கைகளில் வெறுமனே பெயர் எழுதுவது போல செய்தல்) செய்ததால், ஒரு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்து, மும்பைக்கெதிரான ஆட்டத்தில் நமன் திர் விக்கெட்டை எடுத்தபோது நோட்புக் செலிபிரேஷன் செய்ததால் இரண்டு தகுதி நீக்கப் புள்ளியோடு போட்டிக் கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கொல்கத்தாவுக்கெதிரான ஆட்டத்தில் சுனில் நரைன் விக்கெட்டை எடுத்த பிறகு மீண்டும் நோட்புக் செலிபிரேஷனில் ஈடுபட்டார். ஆனால், இம்முறை தரையில் நோட்புக் செலிபிரேஷன் செய்தார். அதனால், பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறிருக்க, கடந்த ஞாயிற்றுக் கிழமை பஞ்சாபுக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றிபெற்ற பிறகு ஸ்ரேயஸ் ஐயரைப் பார்த்து வின்னிங் செலிபிரேஷன் செய்த விதம் பேசுபொருளானது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, திக்வேஷ் ரதிக்கு ஒரு விதமாகவும், கோலிக்கு ஒருவிதமாகவும் என பிசிசிஐ இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்திருக்கிறார்.

கோலி
கோலி

தனது யூடியூப் சேனலில் இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "திக்வேஷ் ரதி நோட்புக் செலிபிரேஷன் செய்ததை பார்த்தேன். இரண்டு முறை அபராதத்துக்குள்ளானார். மூன்றாவது முறை, அபராதத்தில் இழக்குமளவுக்குச் சம்பாதிக்கவில்லை என்று பயந்து, தரையில் நோட்புக் செலிபிரேஷன் செய்தார். அதன்பிறகு, பஞ்சாப் vs பெங்களூரு போட்டி முடிந்ததும் கோலியின் செலிப்ரேஷனைப் பார்த்தோம். இதுவும் ஆக்ரோஷம்தான். ஆனால், கோலியிடம் இதைப் பற்றி இதுவரை யாரும் எதுவும் பேசவில்லை. இதில், கோலியை யாருமே இழுக்கவில்லை. ஆனால், திக்வேஷ் ரதி நோட்புக் செலிபிரேஷன் செய்தபோது மட்டும் நீங்கள் அதைச் செய்தீர்கள்" என்று கூறினார்.

இதில் பிசிசிஐ-யின் செயல் குறித்து தங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

SRH vs MI : 'ரோஹித்தின் கம்பேக்கும் மும்பையின் எழுச்சியும்!' - ஓர் அலசல்

'மும்பையின் கம்பேக்!'சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ச்சியாக அந்த அணி பெறும் நான்காவது வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்... மேலும் பார்க்க

Ishan Kishan :அவுட் கொடுக்கப்படாமல் வெளியேறிய இஷன் கிஷன்; பாராட்டிய ஹர்திக்; ட்விஸ்ட் என்ன தெரியுமா?

'இன்றைய போட்டி!'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வீரர் இஷன் கிஷன் அம்பயர் அவுட் கொடுக்காமல் அவரே வெள... மேலும் பார்க்க

IPL 2025: ருதுராஜ், சாம்பா, ஃபர்குசன்... சீசனை விட்டு வெளியேறிய வீரர்கள் யார் யார்?

IPL 2025 சீசன் பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. வீரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வருவதும் எதிர்பாராத தருணத்தில் வெளியேறுவதுமாக சினிமாவைத் தாண்டிய பரபரப்பு ஒவ்வொரு ... மேலும் பார்க்க

Tilak Varma: 'அந்த நேரத்தில் கிரிக்கெட் பற்றியப் புரிதலே எனக்கு கிடையாது'- திலக் வர்மா ஓப்பன் டாக்

மும்பை அணி வீரர் திலக் வர்மா ஜியோ ஸ்டாருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய அவர், “கடந்த ஆண்டு ஐதராபாத்தில் மும்பை அணிக்காக விளையாடிய... மேலும் பார்க்க

Pahalgam Attack: "மௌன அஞ்சலி, கறுப்பு பட்டைகள்..." - MI vs SRH போட்டியில் BCCI அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும... மேலும் பார்க்க

LSG vs DC: "அதிரடி வேண்டும் என்பதால் மில்லரை இறக்கினோம்; ஆனால்..." - தோல்வி குறித்து ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.DC vs LSG - அக்சர் படேல், ரிஷப் பண்ட்இந்நிலையில் அணியின்... மேலும் பார்க்க