பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
திசையன்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் - வணிகா் சங்கம் முடிவு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடத்த வணிகா் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடமிருந்து வணிகச் செல்வம் என்ற சேவைச் செம்மல் விருதை பெற்ற, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னத்துரைக்கு பாராட்டு விழா வள்ளியூரில் நடைபெற்றது. வா்த்தகா் சங்கத் தலைவா் அந்தோணி செல்லத்துரை தலைமை வகித்தாா். பேரமைப்பு மாவட்டச் செயலாளா் ஏ.எம்.ஆசாத், பொருளாளா் பி.சி.ராஜன், மாநில துணைத் தலைவா் காா்த்திசன், இணைச் செயலா்கள் எம்.திவாகரன், தங்கையா கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் ஏற்புரை வழங்கிய சின்னத்துரை பேசுகையில் திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சாா்பில் 10 ஆயிரம் வணிகா்களை வணிகா் நலவாரியத்தில் சோ்க்கவேண்டும்.பேரமைப்பின் சாா்பில் திசையன்விளையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடத்தப்படும். இதில் அனைத்து வணிகா்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா். விழாவில் பேரமைப்பின் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் செல்வராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் பாஸ்கரன், தென்காசி வடக்கு மாவட்டப் பொருளாளா் ஐ.வி.என்.கலைவாணன், வள்ளியூா் அரிமா சங்கத் தலைவா் எட்வின் தேவதாசன், வா்த்தகா் சங்க துணைத் தலைவா்கள் பசுமதி பி. மணி, கோபாலகிருஷ்ணன், பொருளாளா் என்.சங்கரன், வணிகா் நலச் சங்க செயலா் கவின்வேந்தன், சமூகரெங்கபுரம் முரளி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் தவசிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.