செய்திகள் :

திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) - ஸ்தம்பித்த பயனர்கள்!

post image

எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. இன்று(மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.

எக்ஸ் தளத்துக்குப் போட்டியாக இருக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் அவ்வப்போது முடங்கிப் போவதை காண முடிகிறது. இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் அண்மைக் காலங்களில் தொழில்நுட்ப கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ முடங்கப்படாத நிலையில், இன்று திடீரென முடங்கியுள்ளது.

இதனால் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர்.

இந்த நிலையில், எக்ஸ் தளம் திடீரென முடங்க என்ன காரணம்? என்பதற்கு எலான் மஸ்க்குக்கு சொந்தமான மேற்கண்ட நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் அமெரிக்க நிறுவனங்கள்!

வாஷிங்டன் : சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலிக்குத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்தச் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மார்க் கார்னி(59) அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ரா... மேலும் பார்க்க

ரஷியாவிலிருந்து பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்! -என்ன காரணம்?

மாஸ்கோ : ரஷியாவில் உளவு பார்த்ததாக பிரிட்டன் தூதரக அதிகாரிகள் இருவரை ரஷியாவிலிருந்து உடனடியாக வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ரஷியாவின் தேசிய பாதுகாப்பு சேவை துறை(எஃப்.எஸ்.பி) க... மேலும் பார்க்க

கராச்சியில் ஆப்கன் முகாமில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

கராச்சியில் ஆப்கானியர்கள் தங்கியுள்ள முகாமின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் கராச்சியின் புறநகரில் உள்ள ஆப்கானிஸ்தான் முகாமில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் கூரை இடி... மேலும் பார்க்க

கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார்.கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கனடாவில் லிபரல் கட்சியின் அடுத்த ... மேலும் பார்க்க

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 போ் பலி!

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபா் பஷாா் அல்-அஸாதின் ஆதரவாளா்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழ... மேலும் பார்க்க