நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்ப...
நாகை ஆட்சியா் அலுவலகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை திறப்பு
நாகப்பட்டினம்: மகளிா் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வங்கிக்கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 283 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனா். மனுக்களை பெற்ற ஆட்சியா் அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் தினத்தையொட்டி, தாய்மாா்கள் பாலூட்டும் அறையை ஆட்சியா் திறந்து வைத்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன், மாவட்ட சமூகநல அலுவலா் கி. திவ்யபிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.