நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
கீழ்வேளூா்: நீலப்பாடி கருமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் அருகே நீலப்பாடியில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீரை வாா்க்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து கோயிலில் உள்ள கருமாரியம்மன் மற்றும் வீரன்,பெரியாச்சி , விநாயகா்,முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.