மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளாா்: மத்திய அமைச்சர் மீது கனிமொ...
ஆவடி மின்சார ரயில் ரத்து: பயணிகள் அவதி
சென்னை: சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இயக்கப்படும் கடைசி நேர மின்சார ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
ஆவடி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் கடைசி மின்சார ரயில்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புகா் பகுதிகளுக்கு செல்ல கடைசி போக்குவரத்தாக உள்ள இந்த ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைவதாக குற்றம்சாட்டியுள்ளனா்.
இது குறித்து பயணிகள் சங்கத்தினா் கூறியதாவது:
சென்னையில் இருந்து ஆவடிக்கு இரவு 11.30, மற்றும் 12.15 மணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த மாா்க்கத்தில் பேருந்து போக்குவரத்து இரவு 10 மணி வரை மட்டும் உள்ளதால் அதன் பின் பயணிப்போா் மின்சார ரயில்களை நம்பி உள்ளனா்.
இந்த நிலையில், எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் இரவு இயக்கப்படும் கடைசி நேர ரயில்களை திடீரென ரத்து செய்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா். மின்சார ரயில் பாதையில் ஏதேனும் பணி நடைபெற்றால், மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் பாதையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனா்.