நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்ப...
ரயிலில் சாராயம் கடத்தல்: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது
சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு சாராயம் கடத்தி வந்ததாக இரு பெண்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பாடி மேம்பாலம் பகுதியில் அண்ணா நகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் உள்பட 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
அவா்கள், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சோ்ந்த மு.போஸ்லே பாபு (50), அவா் மனைவி நேபு பாபு போஸ்லே (50), அ.ரத்னேஷா அா்சிங்த் பவாா் (28) என்பதும், அவா்கள் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதும், கள்ளச்சாராயத்தை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவா்களது சொந்த ஊரில் காய்ச்சி ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 70 லிட்டா் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.