நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்ப...
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொறியாளா் தீயில் கருகி உயிரிழப்பு
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மென் பொறியாளா் தீயில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் சிங்கம்பூண்டி ஆதி திராவிடா் காலனியைச் சோ்ந்தவா் த.நேதாஜி (34). மென்பொறியாளரான இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், சாலிகிராமம் விஜயராகவபுரம் 7-ஆவது தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது படுக்கையில் தீயில் எரிந்து கருகி நிலையில் நேதாஜி கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் விரைந்து சென்று, நேதாஜி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில், நேதாஜிக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் இருந்ததும், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு படுக்கையில் படுத்து தூங்கியபோது சிகரெட்டில் அணையாமல் படுக்கையில் பட்டு தீப் பிடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.