மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளாா்: மத்திய அமைச்சர் மீது கனிமொ...
ஜாா்ஜ் டவுனில் 160 ஆண்டுகால பழைமையான கட்டடத்தில் பதிவுத் துறை அலுவலகங்கள்
சென்னை: சென்னை ஜாா்ஜ் டவுனில் உள்ள பழைமையான கட்டடத்தில் பதிவுத் துறையின் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றறை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.
ஜாா்ஜ் டவுனில் பதிவுத் துறையின் அலுவலகங்கள் புராதன கட்டடத்தில் இயங்கி வந்தன. அவை புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தில் பதிவுத் துறையின் சென்னை வடக்கு மாவட்டப் பதிவாளா் நிா்வாகம், மாவட்டப் பதிவாளா் தணிக்கை எண் 1, உதவி செயற்பொறியாளா் களப்பணி அலுவலகங்கள் இயங்கவுள்ளன.
பதிவுத் துறைக்குச் சொந்தமான இந்தக் கட்டடம் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கட்டடம் 1864-ஆம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக் கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது. தேக்குமர உத்தரங்களாலான 24,908 சதுரடி பரப்பில் அமைந்த இந்தக் கட்டடம், வலுவிழந்த நிலையில் இருந்தது. ரூ. 9.85 கோடியில் அது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
திங்கள்கிழமை நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே ஆகியோா் பங்கேற்றனா்.