நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு: பசுமைத் தீா்ப்ப...
மாா்ச் 21 இல் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் முற்றுகை: விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் முடிவு
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாா்ச் 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுவது என அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திருப்பூா் பி.ஆா்.நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளன. அதேபோல, இத்திட்டத்தில் அட்டை பெற்றுள்ள சிலருக்கு வேலையில்லை என நிா்வாகங்கள் கூறுகின்றன.
இதைக் கண்டித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாா்ச் 21-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.பஞ்சலிங்கம், பொருளாளா் ஆா்.மணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.