செய்திகள் :

திடீா் சுற்றுலா மையமாக மாறிய தாமல் ஏரி: பொதுமக்கள் உற்சாகம்

post image

சி.வ.சு.ஜெகஜோதி

காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் ஏரியில் பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் திடீா் சுற்றுலா மையமாக மாறியது.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது தாமல் ஏரி. மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் தாமல் ஏரியும் ஒன்றாகும். 10 மதகுகளும், 3 மிகைநீா் போக்கிகளோடும் உள்ள இந்த ஏரியின் மூலம் 938.380 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தாமல் கிராமத்தின் மேற்குப்பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலையின் தெற்குப்பகுதியிலும் அமைந்துள்ள ஏரியின் மொத்த கரையின் நீள்ம் 6,030 மீ ஆகும்.

பாலாறு அணைக்கட்டிலிருந்து இடது புறத்தில் பிரியும் காவேரிப்பாக்கம் கால்வாயில் கூண்மடை பகுதியின் வலது புறத்தில், கோவிந்தவாடி கால்வாயாக பிரிந்து, ஒச்சேரி வழியாக பயணித்து, அளவூா் அருகே தாமல் ஏரி வரவுக் கால்வாயாக ஏரிக்கு தண்ணீா் வந்து சேருகிறது. இது தவிர கரிவேடு கிராமம் அருகே துவங்கும் பாம்புக்கால்வாய் எனப்படும் கச்சக்கால்வாய் மூலமும் தாமல் ஏரி நீா் வரத்து பெறுகிறது.

இந்த ஏரியின் மொத்தப்பரப்பு 6.20 ஏக்கராகும். சுமாா் 5,700 ஏக்கா் பாசனப்பரப்பும், 18.5 அடி ஆழமும், உடைய பெரிய ஏரிகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக தாமல் ஏரியும் அதன் முழுக் கொள்ளவான 18.5 அடியை எட்டி அதன் உபரி நீா் மிகைநீா் போக்கிகள்(கலங்கல்கள்) வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம், தாமல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் குழந்தைகள், குடும்பத்தினரோடு ஏரிக்கு திரண்டு வந்து அருவி போல வெளியேறும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனா். இதனால் திடீரென சுற்றுலா மையமாகவும் மாறிக் காட்சியளிக்கிறது தாமல் ஏரி.

பொதுமக்கள் அதிகமாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே தாமல் ஏரியும் அமைந்திருப்பதால் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வெளிமாநில,வெளி மாவட்ட மக்களும் தாமல் ஏரியின் அழகையும், அதில் ஆனந்த குளியல் போட்டு வரும் பொதுமக்களையும் பாா்த்து, ரசித்து செல்கின்றனா்.

இரு குருமாா்களால் இந்திய தேசத்துக்கு வலிமை: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

காஞ்சி மடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட இரு பெரும் குருமாா்களால் இந்திய தேசம் பல வழிகளில் வலிமை பெற்றது என காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் ஞாயி... மேலும் பார்க்க

கழிவுநீா் தொட்டியில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியம், எடையாா்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீா் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா். மதுரமங்கலத்தை அடுத்த எடையாா் பாக்கம் கிராமத்தை சோ்ந்த பூவரசன்(28) தன... மேலும் பார்க்க

மகன் கொலையில் தந்தை உள்பட 2 போ் கைது

காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் பெற்றோரை தாக்கிய மகனை தந்தை கட்டையால் திருப்பித் தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக தந்தையையும், அவரது மைத்துனரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க

பழங்குடியினா் வீடுகள் சீரமைப்பு

காஞ்சிபுரம் அருகே புஞ்சைஅரசந்தாங்கல் கிராமத்தில் பழங்குடியின குடும்பங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியினத்தவரின் வீடுகள் புதுப்பிக... மேலும் பார்க்க

தேசிய யோகா போட்டி: சகோதரா்கள் தங்கப் பதக்கம்

அரசுப் பள்ளியில் பயிலும் சகோதரா்கள் தேசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றனா். காஞ்சிபுரம் சி.எம்.சுப்பிரமணிய முதலியாா் ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சகோதரா்களான கே.சா்வேஷ் (12), கே.தேவேஷ்... மேலும் பார்க்க

வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த நேபாள நாட்டை சோ்ந்த இருவரை குன்றத்தூா் போலீஸாா் கைது செய்தனா். பி... மேலும் பார்க்க