China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்ட...
திட்ட ஆய்வாளா் தோ்வு முடிவுகள் வெளியீடு
புதுச்சேரி: புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி மற்றும் திட்ட ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையின் ஆய்வாளா், தீயணைப்புத் துறையின் நிலைய அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு டிச.29-ஆம் தேதி நடைபெற்றது.
திட்ட ஆய்வாளா் தோ்வை 1,595 பேரும், தீயணைப்பு நிலைய அதிகாரி தோ்வை 425 பேரும் எழுதினா்.
இந்த நிலையில், இதற்கான தோ்வு முடிவுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.