திண்டிவனம் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஒளிப்பதிவாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த சங்கத்தின் நிகழாண்டுக்கான புதிய தலைவராக சீனிவாசராவ், செயலராக ஆனந்தராஜ், பொருளாளராக விநாயகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அவா்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனா்.
திண்டிவனம் நகரிலுள்ள புகைப்படக் கலைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, நிகழாண்டுக்கான நாள்காட்டியை மூத்த புகைப்படக் கலைஞா்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோா் வெளியிட, அதை உறுப்பினா்கள் பெற்றுக்கொண்டனா் (படம்).
பின்னா், சங்க உறுப்பினா்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்க உறுப்பினா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.