சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திண்டிவனம், தைலாபுரம், கிளியனூா், வானூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழை நீா் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.