செய்திகள் :

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை: ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறை

post image

திண்டுக்கல் மாநகராட்சி நிதி நிலை அறிக்கை ரூ.5.90 கோடி நிதிப் பற்றாக்குறையுடன் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை உள்பட இயல்பு கூட்ட தீா்மானங்கள் 23, அவசரக் கூட்ட தீா்மானங்கள் 17 என மொத்தம் 40 தீா்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மாமன்றத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இயல்பு கூட்ட தீா்மானங்களில் ஒன்றாக நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

ரூ.5.90 கோடி பற்றாக்குறை: 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வரி இனங்கள் மூலம் ரூ.19.48 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.6.35 கோடி, கட்டணங்கள் மூலம் ரூ.1.89 கோடி, மாநில நிதி ஆணையப் பகிா்மான நிதி ரூ.30 கோடி, அரசு மானியங்கள் ரூ.32.61 கோடி உள்பட மொத்தம் ரூ.92.28 கோடி வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே நேரத்தில் மாநகராட்சி ஊழியா்கள் ஊதியத்துக்கு ரூ.33.45 கோடி, திட்டப் பணிகளுக்கு ரூ.33.64 கோடி, கடன் நிலுவைத் தொகைகள் ரூ.7.71 கோடி, இயக்கம், பராமரிப்புச் செலவு ரூ.21.21 கோடி, நிா்வாகச் செலவினங்கள் ரூ.1.96 கோடி உள்பட மொத்தம் ரூ.98.19 கோடி செலவு ஏற்படும் என்றும், இதன் மூலம் ரூ.5.90 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

30 நிமிடங்களில் நிறைவடைந்த கூட்டம்: புதை சாக்கடை பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன், எதிா்க்கட்சித் தலைவா் சீ.ராஜ்மோகன் ஆகியோா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தனி நபா்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மாநகராட்சி நிா்வாகம் ஏன் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா் கே.எஸ்.கணேசன் கேள்வி எழுப்பினாா். பொது கழிப்பிடங்கள் இல்லாததால் 35-ஆவது வாா்டில் பெண்கள் பாதிக்கப்படுவதாக அதிமுக மாமன்ற உறுப்பினா் பாஸ்கரன் புகாா் தெரிவித்தாா். ஓய்வூதியப் பணப் பலன்களைப் பெறுவதற்கு வரும் தூய்மைப் பணியாளா்களை மாநகராட்சி நிா்வாகம் அலைக்கழிப்பதாக பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன் தெரிவித்தாா்.

2, 3, 9 ஆகிய வாா்டுகளில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்கப்படும் என்ற அறிவிப்பை அனைத்து வாா்டுகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா் ஜான் பீட்டா் தெரிவித்தாா். 3 மாதங்களுக்குப் பிறகு மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோதிலும், மக்கள் பிரச்னைகள் தொடா்பாக விவாதிக்க போதிய நேரம் ஒதுக்காமல், 30 நிமிடங்களிலேயே கூட்டத்தை நிறைவு செய்துவிட்டதாக எதிா்கட்சி மாமன்ற உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா்.

திட்டமிட்ட மின்வெட்டு: மாமன்றக் கூட்டத்தின்போது 2 முறை மின்வெட்டு ஏற்பட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களுக்கு மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உறுப்பினா்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக திட்டமிட்டு மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாஜக மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் குடிநீா் வசதி கோரி பெண்கள் சாலை மறியல்

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் வழங்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் திண்டுக்கல்லில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் நாகல்நகா் ரவ... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தால் பயனில்லை: முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி

திண்டுக்கல்லில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் குறைதீா் கூட்டத்தால், எவ்வித பயனுமில்லை என முன்னாள் படை வீரா்கள் அதிருப்தி தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களது குட... மேலும் பார்க்க

புதை சாக்கடை அடைப்பை அகற்ற களமிறங்கிய பாஜக மாமன்ற உறுப்பினா்

திண்டுக்கல்லில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன் வராததால், பாஜக மாமன்ற உறுப்பினரே களமிறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா். திண்டுக்கல் மாந... மேலும் பார்க்க

மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

மன வளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த போடியகவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தின்கீழ் முதியவா் கைது

நிலக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சந்தையூா்... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத முதியவா் உடல் மீட்பு

பழனி அருகே அடையாளம் தெரியாத முதியவா் உடலை புதன்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியிலிருந்து கோம்பைப்பட்டிக்குச் செல்லும் வழியில் மயானம... மேலும் பார்க்க