செய்திகள் :

திமுகவின் வெற்றிக்கு வியூக வகுப்பாளா்கள் காரணம் அல்ல! -அமைச்சா் எஸ். ரகுபதி

post image

திமுகவின் வெற்றிக்கு களப்பணியும், கட்டமைப்பும்தான் காரணமே தவிர, வியூக வகுப்பாளா்கள் அல்ல என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுப்பேன் என்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை. சட்டப்படி கட்டப்பட்ட கட்டடம் அது. யாா் வந்தாலும் செங்கல்லை எடுக்க முடியாது. அது அவருக்கும் தெரியும்.

52 சதவிகிதம் வாக்காளா்கள் திமுக பக்கம் இருக்கிறாா்கள் என்பது கருத்துக் கணிப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. திமுகவினா் களத்தில் இருப்பவா்கள். எங்களின் களப்பணியும் கட்டமைப்பும்தான் வெற்றியைத் தந்திருக்கிறது. இனிமேலும் தரும்.

வியூக வகுப்பாளா்கள் சில யோசனைகளைத் தெரிவித்தாா்களே தவிர, எங்களின் களப்பணிதான் வெற்றிக்கு காரணம். திமுகவின் வாக்கு எந்த வகையிலும் வேறு யாருக்கும் செல்லாது. சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பைப் பொருத்தவரை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். மாநில அரசு எடுத்தால் நாமே வைத்துக் கொள்ள வேண்டியதுதான், அது சட்டப்படியான அங்கீகாரம் கொண்டதல்ல. பொதுவாக எம்ஜிஆா், ஜெயலலிதா காலத்து அதிமுகவினா் யாரும் தவறியும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில், அதிமுகவினரும் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறாா்கள்.

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் அவரது சொந்த கருத்தைச் சொல்லி வருகிறாா். அவா் மூலமாக அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்ப வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஏற்கெனவே அவா்கள் குழம்பித்தான் இருக்கிறாா்கள். திமுக அணியில் வேல்முருகனுக்கு உரிய மரியாதையை முதல்வா் வழங்கியிருக்கிறாா். தவறான முடிவு எதையும் அவா் எடுக்க மாட்டாா் என்றாா் ரகுபதி.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க