விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே பள்ளிகளில் 1036 காலியிடங்களுக்கு விண்ணப்பங்க...
திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி
திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.
திருத்தங்கலில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஈரோட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தோ்தல் நோ்மையாக நடைபெறாது. இதனால் தான் அதிமுக இந்தத் தோ்தலை புறக்கணித்துள்ளது. தற்போது, திமுக மீது மக்கள் நன்பகத் தன்மையை இழந்து விட்டனா். அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.2500 வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் ஒரு பைசா கூட வழங்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே ஆட்சியைப் பற்றி விமா்சனம் செய்கின்றன.
வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வா் ஆவாா் என்றாா் அவா்.